Pages

Saturday, October 24, 2009

மனம் ஒரு குரங்கு-6



மனம் ஒரு குரங்கு-6

ஹப்பா.. இப்போ தான் இங்கே வெய்யில் சற்று குறைந்துள்ளது. இரவில் ஜிலு ஜிலு காற்று வீசுகிறது. இனி வரும் நாட்களில் பகலிலும் காற்று வீசக்கூடும்.. நிம்மதியாக பால்கனி கதவையும் ஜன்னல் கதவையும் திறந்து வைத்துக்கொள்ளலாம். இது தான் இங்கேத்து வசந்த காலம். இந்த பில்டிங்கில் சென்ட்ரல் ஏ சி இருப்பதால் குளிர் காரணமாக எப்போதும் மக்குத்தனமாக இருக்கும். அதுவும் என்னுடைய பரம பாக்கியத்தினால் நாங்கள் வசிக்கும் பிளாட்டில் மட்டும் எ சி யை அட்ஜஸ்ட் பண்ண முடியாது. permanent ஆக 15 டிகிரி தான் . விறைக்கும் குளிரில் fleece blanket போர்த்திக்கொண்டு சுகமாக சோபாவில் சாய்ந்துகொள்ள தான் தோன்றும். வெளியில் அசுரத்தனமாக வெய்யில் அடித்து கொண்டு இருக்கும். நாமோ வீட்டில் குளிருக்கு போர்த்திக்கொண்டு இருப்போம்.. என்ன ஒரு contradiction. இதற்காக கதவை தப்பிதவறி திறந்து வைத்தோம், செத்தோம். வீடே furnace போல ஆகிவிடும்.

இந்த மாதிரி பாலைவன பிரதேசங்களில் வாழ்வதன் பயன்களை யோசித்துபார்த்தேன். வடாம் வத்தல் அரிசி அப்பளம் எல்லாம் சில மணி நேரத்திலேயே காய்ந்து விடும். அதாவது காலையில் இட்டால், மத்தியானத்திற்கு அவைகளை உரித்து எடுத்து, பொறித்து திங்கலாம் (நம்மூர் மே மாச வெய்யிலில் மினிமம் 4-5 நாட்கள் வத்தல் காய வேண்டும் ).ஆமா, இங்கே அதெல்லாம் யாரு பண்ணறாங்க? சொடுக்கு போடுவதற்குள் துணிகள் எல்லாம் காய்ந்து விடும். இட்லி மாவு பிரெஷ் ஆக அரைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் முழுவதும் புளித்துப்போய்விடும். இப்படி பல பயன்கள். ஏன் கேட்கிறீர்கள் போங்கள்! எனக்கு இங்கே மிகவும் அதிகமாக பிடித்த time இந்த நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகும். weather மிகவும் ரம்மியமாக இருக்கும் . welcome spring.

நேற்று மதியம் weekend ஆதலால், மதிய உணவு அருந்தி விட்டு ஏதோ ஒரு டுபாகூர் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம். அது என்ன படம்னா.... நான் இந்த வெளையாட்டுக்கு வரல்ல. அப்புறம் எல்லாரும் turn போட்டுண்டு திட்டரதுக்கா? no ways. சரி. இப்போ விஷயத்துக்கு வர்றேன். இவருடைய ஒன்று விட்ட தம்பி (அடச்சே , அதில்லிங்க , சித்தி பையன்) போன் செய்தான். இங்கே F1 race rehearsal நேற்று நடக்கவிருப்பதாக சொன்னான். அதற்கு அவனிடம் extra passes இருப்பதாக சொன்னான். இவருக்கு அதில் ரொம்ப ஆர்வம் இருப்பது போல தோன்றியது . சரி என்று புறப்பட்டேன் . சாதியத் ஐலன்ட் தாண்டி யாஸ் ஐலன்ட் என்ற இடத்தில் இந்த கார் ரேசிற்கான தளத்தை அமைத்திருந்தார்கள் . இந்த பிரம்மாண்ட event arrangements பார்த்து வாய் பிளந்தேன். ஒரு ஐலன்ட் பூராவும் இவர்கள் ஒரு car race கு அர்ப்பணித்திருக்கிறார்கள். அம்மாடியோவ். இதான் அந்த ஐலன்ட்.




மெயின் ரோடிலிருந்து எடுக்கப்பட்ட படம். அந்த தீவின் நாலா புறமும் விளக்குகள் போடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.



தூரத்திலிருந்து பார்த்த பொழுது fly over போன்றதொரு அமைப்பு தென்பட்டது. அது Ferrari World என்று பிறகு தெரிந்தது. அதை மேலே இருந்து பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று வலையில் தேடி உங்களுக்காக இதோ Ferrari World.

 கார் park செய்து விட்டு வந்தால் அங்கு அரங்கத்துக்குள் செல்ல பஸ்கள் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள் . அவ்வளவு பெரிய இடம் . எங்களுடன் பார்க் பண்ணியவர்களை பின் தொடர்ந்து ஒரு bussil ஏறி அமர்ந்தால், அது அதிவே.........க நத்தை போல சென்று கொண்டு இருந்தது . அந்த யாஸ் ஐலன்ட் பூராவும் எங்களுக்கு சுத்திக்காட்டி கொண்டு தேவையில்லாமல் U turn அடித்துக்கொண்டும் நகர்ந்து சென்று கொண்டு இருந்தது .


 பசுமையோ நீர்பரப்போ இருந்தால் அவ்வளவாக கஷ்டம் தெரியாது . என்னத்தை பார்க்க? மொட்டை வெயில் அதில் பொட்டல் காடு . வரிசையாக பனைமரங்கள் கை தூக்கிக்கொண்டு handsup என்று யாரோ கூரினாற்போல் நின்று கொண்டு இருக்க , வளைந்து வளைந்து ரோடு . இந்த அழகில் சிக்னல்கள் வேறு .

இங்கே பஸ் உள்ளே இருக்கும் மக்கள் எல்லாரும் காட்டுகூச்சல் போட்டு கொண்டு இருந்தார்கள் . முக்கியமாக பிலிப்பிநோக்களில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தத்தலா புத்தலா என்று அதிகம் பேசுபவர்கள் . ஒரு விதத்தில் யோசித்தபொழுது, துபாயில் நான் போன பஸ் பிரயாணங்களை விட இது வித்தியாசமகாவும் குதூகலத்துடனும் இருந்ததாக பட்டது. துபாயில் எல்லா பிரயாணிகளும் பஸ்சில் இறுக்கமாக உட்கார்ந்து இருப்பார்கள் . ஏ சி பஸ் ஆதலால் ஜன்னல் திறக்காது. அதானலோ என்னமோ மனசும் திறக்காது. உர்ர்ர் என்று முகத்தை வைத்துக்கொண்டு, ஒரு போனில் பேசிக்கொண்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ, டிராபிக்கை திட்டிக்கொண்டோ வருவார்கள். அப்படி இல்லாமல் இந்த பஸ்ஸில் எல்லா நாட்டவர்களும் ஒரே நோக்குடன் இந்த பஸ்ஸில் அமர்ந்து இருக்கிறோம் என்று நினைத்த பொது சந்தோஷமாக இருந்தது.

இப்படி ஆலோசித்து கொண்டு இருக்கும்போது தான் தெரிந்தது சுமார் ஒரு மணி நேரமாக அந்த வண்டியில் நாங்கள் அமர்ந்து கொண்டு இருக்கிறோம் என்று . Drop off பஸ் நா இப்பிடியா?இதே நம்மூர்ல பஸ் ஏறி இருந்தா இந்நேரம் திண்டிவனம் தாண்டி போயி இருக்கலாம் என்று புலம்பிக்கொண்டோம்.


என்னுடைய ராஜயோகம் பாருங்கள், அந்த பஸ் முதலில் ஓரிடத்தில் நின்றது. பின்னர் ஒரு போலீஸ் அதை வேறு ஒரு இடத்திற்கு செல்லுமாறு கூற, அது ஊர்ந்து போயி ரெண்டுங்கெட்டான் இடத்தில் நின்று விட்டது. டிரைவரிடம் கேட்டால் instructions
வரவில்லை என்று கூறிவிட்டான். security மிகவும் tighten பண்ணி இருந்தார்கள். பயணிகள் அனைவரும் restless ஆகி விட்டார்கள். ஒரு ஐரோப்பிய பெண் படிக்கட்டில் நிற்க ஆரம்பித்து விட்டாள்.வெளியில் நோட்டம் விட்ட பொழுது பழனி பஸ் ஸ்டான்ட் போல ஜகஜ்ஜோதியாக  மக்கள் கூட்டம்.
மேலும் ஒரு பத்து நிமிடம் கழித்து, வெளியிலிருந்து, ஒரு அராபிய பெண்மணி பஸ் கதவைத்தட்ட, டிரைவர் தெரியாமல் கதவை திறந்து விட, போலீஸ் வண்டியில் இருந்து தப்பும் திருடனைபோல எல்லா பயணிகளும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்!! இதை அவன் முன்னாடியே செய்திருக்கலாம்.


சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அரங்கம் இருந்தது. மகராசன் கேட்டு கிட்டக்க இறக்கி விட்டு இருக்க கூடாதா? என்று புலம்பிக்கொண்டே நடந்தோம். போலீஸ் படை திரண்டு எல்லாரையும் செக் பண்ணி கொண்டு இருந்தார்கள். செக்யூரிட்டி செக் முடிந்து அரங்கத்தில் நுழையும் முன்னரே ரேஸ் தொடங்கி விட்டது. அந்த டிரைவருக்கு அஷ்டோத்தர சத நாமாவளி அர்ச்சனை பண்ணிக்கொண்டே படி ஏறி மேலே சென்றோம். அதற்குள் ஒரு போலீஸ் என்னை tag அணிந்து கொள்ளுமாறு எரிந்து விழுந்தான்.


அரங்கத்துக்குள் ஒரே கூட்டம். ஒரு segment மட்டும் திறந்து விட்டு நிறைய அரபியர்கள்,ஐரோப்பியர்கள், பிலிப்பினோக்கள் தென்பட்டனர். Minority Indians and Lebanese என்று சொல்லலாம் . என் வாழ்வில் முதன் முதலில் ஒரு கார் ரேஸ் . பயங்கர thrilling ஆக இருந்தது . கார் திரும்பும்போது கியர் மாற்றும் சத்தம் காதை பிளந்தது . எவ்வளவு சிறிய ஊர்தி.. எப்படி தான் ஓட்டுகிறார்களோ என்று நினைத்துக்கொண்டே ரெண்டு படம் எடுத்தேன். நான் பார்த்த வரையில் கார் ரேஸ் காண வந்ததை விட தன்னை படம் எடுத்துக்கொள் வதிலேயே அதிகம் முனைப்பு காட்டினர் என்றே எனக்கு தோன்றியது.  பலருக்கும் இந்த ரேஸ் பார்க்க பெரிய ரசனை இருக்க வில்லை. கார்கள் விரைந்து பெரும் இரைச்சலுடன் ஓடிக்கொண்டே இருந்தன. பொறுமையாக உட்கார்ந்து கொண்டு அந்த காட்சியை மனதில் பதிய வைத்துக்கொண்டு இருந்தேன்.அதற்குள் என் கணவருக்கு பொறுமை போயி விட்டது. கிளம்பலாமா என்றார். கார் பார்க்கிலிருந்து அரங்கம் வரும் நேரத்தில் ஒரு 5% கூட நாங்கள் அந்த ரேஸ் பார்க்க செலவிடவில்லை. என்னே ஒரு நிலைமை. நல்ல வேளையாக வரும்போது பஸ் விரைந்து கார் பார்க்கில் drop பண்ணிவிட்டு சென்றது.

4 comments:

Unknown said...

அக்கா... இந்த பதிவை படித்தவர்கள் நிச்சயம் அனுபவித்து ரசித்திருப்பார்கள். காரணம் - இது நாங்கள் பார்க்காத உலகத்தை உன் கண்கள் மூலம் காட்டுவதாலும், புது விஷயங்கள் சுவாரசியமாக இருப்பதாலும் தான்... நல்லது, நீ வெளையாட்டுக்கு வாராம நின்னுகிட்டது... இது போன்ற வித்தியாசமான பதிவுகளாக எழுது... வாழ்த்துக்கள்...

Ananya Mahadevan said...

என் ப்ளாக் ல சினிமா செய்திகளா? மூச்..
ரொம்ப ஓவரா புகழ்ந்துட்டே. நன்றி நன்றி நன்றி!!!(ECHO)

Anonymous said...

F1.. if my husband had called me for that, I would have never gone. You are Great!!

Ananya Mahadevan said...

அதெல்லாம் ஒண்ணும் இல்லே மிட்டு, ரேஸ் க்கு என்ன spellingன்னே எனக்கு தெரியாது. சும்மா போய் தான் பாப்போமேன்னு போயிட்டு வந்தேன் அவ்ளோ தான். நான் கூட பாத்து இருப்பேன் போல இருக்கு, இவருக்கு சுத்தமா பொறுமையே இல்லை.

Related Posts with Thumbnails